Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படும் அம்மான் பச்சரிசி !!

Webdunia
அம்மான் பச்சரிசி சிறு செடி வகையைச் சார்ந்தது. தரிசு நிலங்கள், சாலை ஓரங்கள் மற்றும் ஈரப்பாங்கான சமவெளி நிலங்களில் சாதாரணமாகக் காணப்படும். ஆண்டு முழுவதும் பரவலாகக் காணப்படுபவை. 50 செ.மீ. வரை உயராமாக வளரும்.

அம்மான் பச்சரிசி இலைகள் எதிரெதிராக அமைந்தவை, சொரசொரப்பானவை. பச்சை, சிவப்பு நிறங்களில் இலைகள் காணப்படும். சிறுபூக்கள் தொகுப்பாக  கணுக்களில் அமைந்திருக்கும்.
 
அம்மான் பச்சரிசி பூக்கள் வெண்மையாகவும், காம்புகளுடன் காணப்படும். தாவரத்தில் எப்பகுதியைக் கிள்ளினாலும் பால் வடியும். அம்மான் பச்சரிசிக்கு சித்திரப்  பாலாடை என்கிற பெயரும் உண்டு.
 
விந்து ஒழுகுதல் கட்டுப்பட அம்மான் பச்சரிசி மற்றும் கீழாநெல்லி ஆகியவற்றின் இலைகளைச் சம அளவாக எடுத்துக் கொண்டு, நன்றாக அரைத்து, எலுமிச்சம்பழ  அளவு, 1 டம்ளர் எருமைத் தயிரில் கலக்கி காலை வேளையில் மட்டும் 15 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.
 
இரத்தக் கழிச்சல் குணமாக அம்மான் பச்சரிசி இலைகளை அரைத்து, எலுமிச்சம்பழ அளவு, 200 மி.லி. பசும்பாலுடன் கலந்து, தினமும் காலையில் மட்டும் மூன்று நாட்கள் குடிக்க வேண்டும்.
 
அம்மான் பச்சரிசி பால் ஒரு அரிய மருந்தாகும். அம்மான் பச்சரிசி பாலை முகத்தில் தடவ, முகப்பரு, எண்ணெய்ப்பசை ஆகியவை மாறும். காலில் பூசிவர, கால் ஆணி, பாதத்தில் ஏற்படும் பித்த வெடிப்பு ஆகியவை மறையும். பால் பருக்கள் மீது பூச அவை உதிரும். இதனை உள் ம‌ருந்தாகக் கொடுக்க இரைப்பு குறையும்.
 
ஆஸ்த்துமா, வாய்ப்புண் ஆகியவற்றுக்கான மருத்துவத்திலும் அம்மான் பச்சரிசி துணை மருந்தாகப் பயன்படுகின்றது. அதிக அளவில் உட்கொண்டால் வாந்தியைத்  தூண்டும். இதன் நோய் எதிர்ப்புச் சக்தியும், காசநோயைக் கட்டுப்படுத்தும் பண்பும் மருத்துவ ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments