Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொடுகு தொல்லையை முற்றிலும் போக்க உதவும் அற்புத குறிப்புகள் !!

Webdunia
பசலை கீரையை அரைத்துத் தலையில் தேய்த்துக் குளிக்கலாம். அருகம்புல் சாறு எடுத்துத் தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து நன்றாகக் காய்ச்சிப் பின்பு ஆறவைத்துத் தலையில் தேய்க்கலாம்.

காய்ந்த வேப்பம்பூ 50 கிராம் எடுத்து, 100 மி.லி. தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளஞ்சூடு பதத்துக்கு ஆறியதும், வேப்பம்பூவுடன் சேர்த்து  எண்ணெய்யைத் தலையில் தேய்த்து அரை மணி நேரத்துக்குப் பிறகு குளிக்க வேண்டும்.
 
சின்னவெங்காயத்தைத் தோலுரித்துச் சுத்தம் செய்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து, அதை எடுத்துத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், தலைச் சூடு  குறைந்து குளிர்ச்சியடையும்.
 
தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தைச் சேர்த்துக் காய்ச்சித் தலையில் தேய்த்துக் குளிக்கலாம். பாசிப்பயறு மாவு, தயிர் கலந்து தலையில் ஊறவைத்துப் பின்னர்க்  குளிக்க வேண்டும்.
 
கற்றாழைச் சாற்றைத் தலையின் மேல் பகுதியில் நன்கு படும்படி தேய்த்து ஊறவைத்து, சிறிது நேரம் கழித்துக் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
 
தலையில் சிறிதளவு தயிர் தேய்த்துச் சில நிமிடங்கள் கழித்துச் சீயக்காய் தேய்த்துக் குளிக்கலாம். வேப்பிலைக் கொழுந்து, துளசி ஆகியவற்றை மையாக அரைத்துத்  தலையில் தேய்த்துச் சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.
 
நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர், கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிதுநேரம் கழித்துக் குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு  செய்வது நல்லது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments