Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வால் மிளகின் அற்புத மருத்துவ நன்மைகள் !!

Webdunia
வால் மிளகு சாப்பிட்டால் புற்று நோய் வராமல் தடுக்கும். அதாவது புராஸ்டேட் புற்று நோயை போக்க வால் மிளகு செயல்படுகிறது.

கீரை வகைகள் அதாவது சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை சமைக்கும் பொழுது வால் மிளகு பொடி செய்து சேர்த்தால் மிகவும் நல்லது அவற்றின் நன்மைகள் பெறலாம்.
 
வால் மிளகு காரத்தன்மை உடையது இதை சாப்பிடும் பொழுது சிறுநீரை பெருக்கும், வாயு பிரச்சினை சரிசெய்யும், கோழையை அகற்றும் இது போன்ற பிரச்சினைகள் சரி செய்யும்.
 
பல் சம்பந்தபட்ட பிரச்சினைகள் குணமாக கறிவேப்பிலைப் பொடி, லவங்கம், கடுக்காய், நெல்லிவற்றல், வால்மிளகு சேர்த்துத் தயாரித்த பல்பொடியில் பல் துலக்கினால் குணமாகும்.
 
தொண்டைகம்மல், குரல் அடைபடுதல் போன்ற பிரச்சினைகள் இருந்தால் அக்கிரகாரம், அதிமதுரம் போன்றவற்றுடன் வால் மிளகைச் சேர்த்து லேகியமாகக் கிளறி சாப்பிட வேண்டும்.
 
உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் தன்மை வால் மிளகு உண்டு. வால் மிளகை பொடி செய்து இளநீரில் கலந்து குடித்தால் வயிற்றில் ஏற்படும் சூடு பிரச்சினை சரிசெய்யும்.
 
வயிற்று இருக்கும் புழுக்களை வெளியேற்ற சமயலில் வால் மிளகை சேர்த்து கொள்ள வேண்டும். சளி, இருமல் இருந்தால் வால் மிளகு,லவங்கப்பட்டை சேர்த்து கொதிக்க வைத்து பருக வேண்டும்.
 
வால் மிளகை தூள் செய்து சீரகம் சேர்த்து மோருடன் கலந்து குடிக்க வேண்டும். கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் தன்மை வால் மிளகு உண்டு.
 
வால் மிளகு பாலில் கலந்து குடித்தால் கப நோய் போன்ற பிரச்சினைகள் குணமாகும். வாதபித்தம், வயிற்று வலி போன்ற பிரச்சினைகள் குணப்படுத்தும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments