Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முள்ளங்கி சாற்றில் உள்ள அற்புத மருத்துவ பயன்கள் !!

Webdunia
முள்ளங்கி சாறு தினமும் அருந்துபவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, கொழுப்பு அடைக்காமல் இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது. மேலும் செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.

மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும், ஒரு டம்ளர் முள்ளங்கி ஜூஸ் குடித்து வந்தால், விரைவில் நோய் குணமாகும். இதனை தொடர்ந்து குடித்து  வந்தால், வெகுநாளாக சரியாகாத மூலநோய் கூட, பூரணமாக குணமடைய வாய்ப்புள்ளது.
 
குழந்தைகளுக்கு, சிறு வயதிலிருந்தே முள்ளங்கியை உணவில் சேர்த்து வந்தால் ஞாபக சக்தி பெருகும், மூளை சிறந்த வளர்ச்சி அடையும்.
 
முடி உதிர்தல் மற்றும் பொடுத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு முள்ளங்கி சாறு நல்ல தீர்வு தருகிறது. தைராய்டு கோளாறுகள் இருப்பவர்கள் சிவப்பு முள்ளங்கி சாற்றினை குடிக்கலாம்.
 
முள்ளங்கி சாறு நீண்ட காலமாகத் தொல்லை தரும், வாயுக் கோளாறுகளை விரட்டவும் மற்றும் பேதி, தலைவலி, தூக்கமின்மை ஆகிய துன்பங்களில் இருந்து  விடுதலை பெறவும் பயன்படுத்தப்படுகிறது.
 
முள்ளங்கி சாற்றோடு சர்க்கரை சேர்த்து அருந்துவதால் இருமல் குணமாகும். மேலும் பலவித ஈரல் நோய்களுக்கும் இது பலன் தரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்லருக்கு போகாமல் முகத்தை பொலிவாக வைத்து கொள்வது எப்படி? எளிய ஆலோசனைகள்..!

வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு சில எளிய வழிமுறைகள்..!

மூக்கு கண்ணாடியை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

தாடி வளர்ப்பவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய சுகாதார குறிப்புகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments