Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புளிச்சகீரையின் அற்புத மருத்துவ பயன்கள் !!

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (09:37 IST)
புளிச்சகீரையில் தாது உப்புக்கள், இரும்புச் சத்து, விட்டமின்கள் ஃபோலிக் அமிலம் மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகள் என உடல் வலிமை மற்றும் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்து உள்ளன.


பித்த சம்பந்தமான நோய்களை உடையவர்கள் இந்த கீரையை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. இது பித்ததை அதிகப்படுத்தும் குணமுடையது. புளிச்சகீரையில் நீர்ச்சத்து மிகுதியாக இருப்பதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

புளிச்சக்கீரை உடல் சூட்டைக் தனித்து உடல் வெப்பத்தை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது. தோல் தொடர்பான ஒவ்வாமை நோய்களுக்கும் சிறந்த நிவாரணமாக புளிச்ச கீரை விளங்குகிறது.

புளிச்சக்கீரையின் கனியில் இருந்து வரும் சாற்றை சர்க்கரை மற்றும் மிளகுடன் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் மற்றும் வயிற்று நோய்கள் குணமாகிறது.

புளிச்சகீரையில் வைட்டமின் சி மற்றும் தாதுக்கள் நிறைந்திருப்பதால், சருமப் பாதுகாப்புக்கு நல்லது. புளிச்சகீரையானது ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்பட்டு, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

புளிச்சகீரையானது உடலில் சேரும் கெட்ட கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது. பித்தம் உடலில் அதிகமாகி, நாவில் சுவையின்மை பிரச்னை இருப்பவர்கள், புளிச்சகீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, பிரச்னை நீங்கும்.

சொறி, சிரங்கு போன்ற சரும நோய் உள்ளவர்கள் இந்த கீரையை சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களுக்கு இரும்புச்சத்து குறைவதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

8 வடிவ எண்களில் வாக்கிங் செல்வது நன்மையா?

பாட்டிலில் எத்தனை நாட்கள் குடிநீரை சேமித்து வைக்கலாம்?

பச்சை ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் ஏராளமான பலன்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments