Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மான் பச்சரிசி செடியின் அற்புத மருத்துவ பலன்கள் !!

Webdunia
அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் மரு உதிர்ந்துவிடும் அம்மான் பச்சரிசி, தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து பாசிப்பருப்பு உளுந்தம் பருப்பு இவற்றுடன் சேர்த்து கூட்டு வைத்து அதனுடன் தேங்காய் துருவல், நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் உடம்பில் தாது பலப்படும்.

ஈரமுள்ள இடங்களில் தானே வளரும். வடிவ இலைகளையுடையது. பால் உள்ளவை. விதை மூலம் இனப்பெருக்கம் அடைகிறது. இலை, தண்டு, பால், பூ ஆகியவை பயன்தரும்.
 
இதன் பாலை நக சுற்றிக்கு தடவ குணமாகும். சிவப்பு அம்மான் பச்சரிசி மூலிகைக்கு வாதம், பிரமேகம் ஆகியவை போகும். சுக்கில தாது விருத்தியாகும். இதை வெள்ளிபஸ்பம் என்றும் கூறுவர்.
 
தாய்ப்பால் சில தாய்மார்களுக்கு குழந்தைக்கு தேவையான அளவு சுரக்காமல் இருக்கும். போதுமான அளவு சுரக்க, அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.
 
சில பெண்களுக்கு வெள்ளைபடுதல் ஒரு பிரச்சனையாக இருக்கும். அது நீங்க அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் ஐந்து நாட்கள் வரை அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் நின்றுபோகும்.
 
அம்மான் பச்சரிசி இலை, மிளகு மூன்று, மற்றும் வேப்பிலை சிறிதளவு சேர்த்து அரைத்து அதிகாலை சாப்பிட்டு வந்தால் உடல் வலு பெரும். அம்மான் பச்சரிசி இலை, தூதுவளை இலை, இரண்டையும் சம அளவு கலந்து, துவையல் போல் அரைத்து சாப்பிட்டு வந்தால், உடல் வலு வரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

குளிர் தாங்க முடியவில்லையா? என்னென்ன பிரச்சனை இருக்கலாம்?

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாமா?

வெறுங்காலுடன் வாக்கிங் செல்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

உயர் ரத்த அழுத்தத்தை தவிர்க்க செய்ய வேண்டிய 4 விஷயங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments