Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அற்புத மருத்துவ பலன்கள் நிறைந்த தொட்டாற் சுருங்கி...!

Webdunia
காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் காணப்படும் தொட்டாற்சுருங்கி செடி காந்த சக்தி உடையது என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தெய்வீக மூலிகையை தொடர்ந்து 48 நாட்கள் தொட்டுவந்தால் மனோசக்தி அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயுர்வேத மருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. தோல்வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சனை,  ஆண்மைகுறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது.
 
சூடு பிடித்து சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் 6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும். இதனால் சூடு குறைந்து சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
 
இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையலவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல்  குளிர்ச்சியடையும், வயிற்றுப்புன்ணும் ஆறும்.
 
ஆண்மைக் குறைபாடு உள்ளவர்கள் இதன் இலையைஅரைத்து பாலில் 15 கிராம் கலந்து சாப்பிடவேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு  சாப்பிட்டு வர ஆண்மை பெருகும்.
 
ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற தண்ணீர் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை  கொடுக்கவும். இவற்றால் நீர் அடைப்பு, கல்லடைப்பு தீரும்.
 
தொட்டா சிணுங்கி இலைச்சாறை தேமல் மேல் பூசிவர தேமல் குறையும். இந்த இலைச்சாற்றை பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களின் மீது  தடவி வர ஆறும்.
 
தொட்டா சிணுங்கி இலை, வேர் இரண்டையும் காய வைத்து பொடி செய்து பாலில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க  சர்க்கரை நோய் குறையும்.

தொடர்புடைய செய்திகள்

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

நாக்கை தூய்மையாக வைத்திருப்பது எப்படி?

கர்ப்பிணி பெண்கள் கோடை வெயிலில் பாதுகாப்பாக இருப்பது எப்படி?

சித்திரா பௌர்ணமி ஸ்பெஷல்: சித்ரான்னம் செய்வது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments