Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்றாடம் துளசி க்ரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் !!

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (11:11 IST)
கிரீன் டீயில் பல வித உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது. பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது. துளசியில் உள்ள வைட்டமின் ஏ, பார்வை கோளாறுகளை சரிசெய்யும். எனவே பார்வை பிரச்சனைகள் இருப்பவர்கள், துளசி க்ரீன் டீயைக் குடித்தால், பார்வை கோளாறுகளை சரிசெய்யலாம்.


கிரீன் டீயில், துளசி இலைகளைப் போட்டு குடித்து வந்தால், உடலில் உள்ள பல்வேறுபட்ட நோய்களை அடியோடு அழிக்க உதவி புரிகின்றது. அந்தவகையில் க்ரீன் டீயில் துளசி இலைகளை சேர்த்து குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

சளி, இருமல் இருக்கும் போது துளசி டீ போட்டுக் குடிப்போம். அதிலும் க்ரீன் டீயுடன் துளசியைப் போட்டு குடித்தால், ஆஸ்துமா, மார்புச் சளி போன்றவை குணமாகும். மேலும் இந்த டீயைக் குடித்தால், சுவாசப் பாதையில் உள்ள வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுக்களும் எளிதில் அகலும்.

துளசி க்ரீன் டீயில் உள்ள ஆண்டி-மைக்ரோபியல் தன்மை, காய்ச்சலில் இருந்து விடுவிக்கும். அதிலும் மலேரியா, டெங்கு என எந்த வகையான காய்ச்சலையும் குணமாக்க இது உதவும்.

துளசியில் மக்னீசியம் ஏராளமாக இருப்பதனால் இதனை க்ரீன் டீயுடன் சேர்த்து குடிக்கும் போது, இரத்த நாளங்கள் விரிவடைந்து, இரத்த ஓட்டம் சீராகி, இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து, இரத்த அழுத்தம் சீராகி, இதய பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

க்ரீன் டீயுடன் துளசி இலைகளை சேர்த்து குடித்தால், மன அழுத்தத்தைத் தூண்டும் ஹார்மோனான கார்டிசோல் கட்டுப்படுத்தப்பட்டு, உடலும் ரிலாக்ஸாக இருக்கும். க்ரீன் டீயுடன் துளசி இலைகளை சேர்த்து குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்கும் செயல்முறை வேகமாக்கப்பட்டு, உடல் எடை அதிவேகமாக குறையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன?

அரைக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

அதிகளவு எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்..!

குழந்தைகளுக்கு பிஸ்கட் சாப்பிட கொடுப்பது நல்லதா?

சுண்டல் அவித்து சாப்பிடுவதால் கிடைக்கும் வைட்டமின்கள்.. ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments