Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரும நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக செயல்படும் கற்றாழை...!!

Webdunia
கற்றாழை மற்றும் வாழைப்பழம் மாய்ஸ்சரைசிங் தன்மை மற்றும் எல்ல வகையான சருமத்திற்கும் குறிப்பாக வழக்கமான எளிதில் பாதிக்கும் சருமத்திற்கு மிகவும் ஏற்றது. இது சருமத்தை எரிச்சலில் இருந்து விடுவித்து சருமத்தின் எலாஸ்டிக் தன்மையை மேம்படுத்துகிறது.
கற்றாழை முகத்தை பொலிவை தருவதோடு இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை புத்துயிர் பெற செய்கிறது. கற்றாழையை தொடர்ந்து  பயன்படுத்துவதால் தோல் மிருதுவாக இருக்கும்.
 
கற்றாழை ஜெல் பயன்படுத்துவதால் தோல் மிருதுவனதாக இருக்கும். முகப்பரு மற்றும் எண்ணெய் வழியும் முகத்தை தடுக்கவும் இந்த  கற்றாழை பயன்படுகிறது.
 
காற்றாழையில் இருந்து நேரடியாக அதன் ஜெல்லை எடுத்து முகத்தில் பயன்படுத்தலாம். இல்லையென்றால் கடைகளில் விற்கும் கற்றாழை  ஜெல்லையும் வாங்கி பயன்படுத்தலாம்.
கற்றாழையின் ஜெல் உங்களது முகத் தீலில் படிந்துள்ள கரும்புள்ளிகளை நீக்கி பொலிவுறச் செய்யும். மேலும் முகப்பருக்களை கட்டுப்படுத்தக்  கூடிய வல்லமை கொண்டுள்ளது.
 
எலுமிச்சை சாறு மற்றும் கற்றாழை கலந்த கலவையானது முகப்பருக்களை வேருடன் அழிக்கும் திறன்களையும் கொண்டுள்ளது.
 
கற்றாழை ஜெல் புறஊதாக் கதிர்களிடம் இருந்து நம் சருமத்தினைக் காக்கிறது. சரும நோய்களுக்கும் இது சிறந்த நிவாரணியாக  செயல்படுகிறது. 
 
ஊட்டச்சத்துக்கள் மிகுந்த இந்த கற்றாழை ஜெல்லானது பலவிதமான சரும நோய்களில் இருந்து நம்மைக் காக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments