Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமுடி சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் போக்கும் வெந்தயம்....!

Webdunia
வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலைக்கு தடவி வைத்திருந்து குளிப்பதால் நல்ல பலன் கிடைக்கும். முடி கொட்டுதல், பொடுகு, தலை வழுக்கை, முடி மெல்லியதாக ஆகுதல் ஆகியவற்றுக்கு வெந்தயத்தை தாராளமாக உணவில் சேர்த்து கொள்ளலாம்.
வெந்தயம் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனோடு 4 கப் நீர் ஊற்றி அடிப்பிலிட்டு 15 நிமிடங்கள் காய்ச்சி எடுத்து ஆற வைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு  தினம் 2 முறை முகத்தை கழுவுவதற்கு உபயோகித்தால் முகத்துக்கு நல்ல வனப்பை தருவதோடு, சுருக்கங்களை நீக்கி நல்ல மென்மையான பொன்  நிறத்தையும் கொடுக்கும்.
 
வெந்தயத்தோடு தேன் சேர்த்து முகப்பருக்களின் மீது பூசி வைத்திருந்து இளஞ்சூடான நீரில் கழுவி வர முகப்பருக்கள் குணமாகும். வெந்தயத்தை தண்ணீரில்  ஊற வைத்து அரைத்து எடுத்துக் கொண்டு தலையில் தேய்த்து குளித்துவர முடி கொட்டுவது நின்று முடி நன்கு வளர தொடங்கும்.
 
வெந்தயத்தை இரவு முழுவதும் நீர்விட்டு ஊறவைத்து காலையில் மைய அரைத்து வைத்துக் கொண்டு அதனோடு சிறிது தயிர் சேர்த்து நன்கு கலந்து தலை முடிக்கும், தலையின் மேற்புறத்தும் தடவி நன்றாக மசாஜ் செய்து வைத்திருந்து 20 நிமிடங்களுக்கு பிறகு தலைக்கு குளித்தால் பொடுகுகள் போகும்.
 
வெந்தயத்திற்கு இளநரையையும் போக்கக்கூடிய மருத்துவ குணம் உண்டு. கைப்பிடி அளவு வெந்தயத்தை 300மி.லி. தேக்காங் எண்ணெய்யில் இட்டு கொதிக்க  வைத்து எடுத்து வடிகட்டி இளஞ்சூட்டோடு தலைக்குத் தேய்த்து நன்கு மசாஜ் செய்துவர இளநரையைத் தடுத்து நிறுத்தும். எண்ணெய் இரவு முழுவதும்  தலையில் ஊறும்படி வைத்திருந்து காலை குளிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments