Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து பாகங்களும் அற்புத மருத்துவ பயன்கள் நிறைந்த நெல்லி !!

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (18:30 IST)
நெல்லிப்பூவை கைப்பிடி அளவு எடுத்து மென்று சாப்பிட்டால், மலச்சிக்கல் இருக்காது. உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும். நெல்லிக்காயை துவையலாக சாப்பிட்டால் வாந்தி மற்றும் சுவையின்மை நீங்கி, சுவை உண்டாகச் செய்யும்.

* நெல்லிக்காய், நெல்லிப்பழம் இவற்றை தினமும் சுவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவுடன் அழகு பெறும். நெல்லிக்காயை உண்டால் தலைச்சுற்றல் மற்றும் வாந்தி நீங்கும்.
 
* நெல்லிவற்றலுடன் வில்வஇலை, சீரகம், சுக்கு, பொரி ஆகியவற்றை ஒன்றாக இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் பித்த வாந்தி நிற்கும்.
 
* நெல்லி விதையுடன் சுத்தமான ஓமம், பசலைக்கீரை விதையை சமமாக எடுத்துக் கொண்டு பொடியாக்கி, தேன் கலந்து சுண்டைக்காய் அளவு உருட்டி காலை, மாலை தண்ணீரில் உட்கொள்ள, பெருநோய் எனப்படுகின்ற குஷ்டநோய் வகைகள் யாவும் நீங்கும்.
 
* நெல்லி மரத்தின் பாகங்களை காயகல்ப முறைப்படி சாப்பிட்டு வந்தால், பெருவயிறு, இரத்தசோகை, மூலம், பெண்களுக்கு உண்டாகும் அதிக ரத்தப்போக்கு ஆகியவை நீங்கும்.
 
* நெல்லி மரத்தின் இலைக் கொழுந்தை நன்கு அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் சீதத்துடன் கூடிய கழிச்சல் தீரும். நெல்லிவற்றலை தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.
 
* நெல்லி வற்றலை ஒன்றிரண்டால் இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து பாதியாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி,அதில் சர்க்கரை மற்றும் சிறிதளவு பால் சேர்த்து சாப்பிட்டால் உடல்சூடு, வாந்தி ஆகியவை நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments