Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து பாகங்களும் மருந்தாகி பயன்தரக்கூடிய குணம் கொண்ட சீந்தில் கொடி !!

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (12:16 IST)
சீந்தில் கொடியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருந்தாகிப் பயன்தரக்கூடிய குணம் கொண்டது.


சீந்தில் செரிமானமின்மை, வலி, சோர்வு ஆகியவற்றை குணமாக்கும் தன்மையுடையது. தாது விருத்தியை உண்டாக்கக்கூடியது. காய்ச்சலைத் தீர்க்கக் கூடியது.

மூட்டு வலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடியது. ரத்தத்தின் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தக் கூடியது. கல்லீரலைப் பலப்படுத்தக் கூடியது. உடல் தேற்றியாக விளங்குவது.

அமிர்தவல்லி எனும் சீந்தில் கொடியிலிருந்து எடுக்கப்படும் சீந்தில் சர்க்கரையை உண்டு வந்தால் கை, கால்கள் மரத்துப் போவது போன்ற சின்ன பிரச்னைகள் முதல் பால்வினை நோயினால் ஏற்பட்ட துன்பங்கள் வரை விடுதலை கிடைக்கும்.

ஆயுர்வேத மருத்துவ நூல்கள் உலர்ந்த சீந்திலை மஞ்சள் காமாலையை குணமாக்கவும், ரத்த சோகையைப் போக்கவும், அடிக்கடி சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்கவும், சரும நோய்களை குணமாக்கவும் பரிந்துரை செய்கிறது.

சீந்தில். நாவறட்சியையும் உடற்சூட்டையும் போக்கக் கூடியது. ஆரோக்கியமுடன் வாழவும் தீராத நோய்களை தீர்த்து வைக்கவும் உதவக்கூடிய சஞ்சீவி மூலிகை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments