Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மை கொண்ட தூதுவளை !!

நோய் எதிர்ப்பாற்றல்
Webdunia
சளி, இருமல், காய்ச்சல் முதலான உடல்நலக் கோளாறுகளை சமாளிப்பதற்கான எளிய வழி வகை களில் தூதுவளையும் ஒன்று. உணவாகவும், மருந்தாகவும் பெருமளவில் பயன்படக்கூடிய தூதுவளைக்கு ‘கபநாசினி’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

தூதுவளை மூலிகையின் அனைத்து பாகங்களுமே (இலை , தண்டு, பூ, காய், கனி, வற்றல்) இருமல், சளி முதலிய நோய்களிலிருந்தும், கண் நோய், எலும்பு நோய், காது நோய்களுக்கெல்லாம் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
 
தூதுவளையின் இலைகள் மூச்சுப்பாதையில் கோழையகற்றி செய்கையை வெளிப்படுத்தி இருமல், இரைப்பு நோய்களைக் குணப்படுத்தக் கூடிய தன்மை வாய்ந்தது.
 
தினந்தோறும் காலையில் ஒரு கைப்பிடி தூதுவளை இலையும், 3 அல்லது 5 மிளகும் சேர்த்து மென்று சாப்பிட கப நோய்கள் குணமாகும். இலைகளைத் துவையல், குழம்பு செய்து சாப்பிட கோழைக்கட்டு நீங்கும். இலையை எண்ணெய் விட்டு வதக்கி துவையல் செய்து உண்டு வர மார்புச் சளி, இருமல், நீரேற்றம் முதலியவை கட்டுப்படும்.
 
தூதுவளையைக் கொண்டு செய்யப்படும் குடிநீருடன் (கஷாயம்) தேன் கலந்து பருக சுரம், ஐய சுரம், வளி சுரம் இவை அனைத்தும் குணமாகக் கூடும். தூதுவளை நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மை இருக்கின்றன.
 
தூதுவளை கீரையை சமையலில் சாம்பார், ரசம், துவையல் போன்ற முறைகளில் தயாரித்து பயன்படுத்தலாம். இதை குழந்தைகளுக்கு குறைந்த அளவு கொடுக்கலாம். சளி தொந்தரவுகள் இருப்பவர்கள் பிரச்னை தீரும் வரையும் மற்றவர்கள் வாரத்திற்கு 2 முறையும் பயன்படுத்தலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிப்பு உணவுகள் அதிகம் சாப்பிட்டால் அறிவாற்றல் பாதிக்குமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

நீரிழிவு பாதம் வெட்டி அகற்றப்படுவதை தடுக்கும் உத்திகள்! - புரொஃபசர் M. விஸ்வநாதன் வழங்கிய உரை!

வெயில் காலத்தில் உடல் பாதுகாப்புக்கு பயன் தரும் வெங்காயம்..!

மூத்த குடிமக்களுக்கு பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி மூலம் சிகிச்சை! - டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை!

அடுத்த கட்டுரையில்
Show comments