Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயற்கையான முறையில் சருமத்திற்கு சிகிச்சையளிக்கும் சாரபருப்பு !!

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2022 (11:24 IST)
சாரபருப்பு பயரின் அளவு சற்று தட்டையானது மற்றும் பாதாம் போன்ற சுவை கொண்டது. இவற்றை பச்சையாகவே சாப்பிடலாம் என்றாலும், அவை பெரும்பாலும் உணவின் சுவையை அதிகபடுத்துவதால் அவை பெரும்பாலும் வறுக்கப்படுகின்றன. அல்வா, பாயசம், மைசூர் பாக் போன்ற இனிப்பு வகைகளில் சாரைப் பருப்பு சேர்க்கப்படுகிறது.


சார பருப்பில் புரதம், கொழுப்பு, கால்சியம், நார்ச் சத்து, இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீஷியம், தாமிரம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன.

சாரபருப்பு குளிர்ச்சி தன்மை கொண்டது. இந்த பருப்பு இயற்கையாகவே உடல் வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். ஆயுர்வேத மருந்துகளில், சாரபருப்பு பெரும்பாலும் சருமத்தில் அரிப்பு, வேர்க்குரு போன்ற சரும சிகிச்சையளிப்பதற்கான தயாரிப்புகளில் சேர்க்கப்படுகிறது.

 சாரபருப்பில் கலோரிகள் குறைவாக உள்ளன, ஆனால் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இது அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும். இதனால் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றாது.

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், எடை கூட நினைப்பவர்கள் தினமும் 10 முதல் 15 கிராம் சாரபருப்பு சாப்பிடலாம். அதிக எடை, கொழுப்பு உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

சாரபருப்புலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கிறது மற்றும் கருமையான புள்ளிகள் மற்றும் கறைகளை நீக்க உதவுகிறது.

சாரபருப்பை மாவு, தயிர், தேன் மற்றும் எலுமிச்சை, அல்லது ரோஸ் வாட்டர் மற்றும் முல்தானி மெட்டி போன்றவற்றில் சேர்த்து ஸ்க்ரப்களை உருவாக்குகின்றனர். இந்த ஸ்க்ரப்கள் சருமத்தை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாத்து முகப்பருவைத் தடுக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோம்பை உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் பயன்கள்..!

பிரைடு ரைஸ் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு ஏற்படும் தீங்குகள்..!

உடலுக்கு தேவையான புரதச் சத்துக்கள் உணவுகள் என்னென்ன?

காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் என்னென்ன?

ஆஸ்துமா நோய் ஏற்படுவது ஏன்? குணப்படுத்த என்ன வழிகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments