Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனநிலை பாதிப்பை போக்கும் மருதாணிப்பூ!

மூலிகை மருத்துவர் தமிழ்குமரன்

Webdunia
செவ்வாய், 16 ஏப்ரல் 2013 (15:50 IST)
FILE
மனநிலை பாதிச்சவங்களுக்கு சில வைத்தியம் சொல்றேன ்:

இந்த மாதிரி பாதிப்பு உள்ளவங்களை புங்கை மர நிழல்ல இளைப்பாற வையுங்க. அடிக்கிற வெயில்ல எல்லோருமே புங்கை மர நிழல்ல படுத்து தூங்கி பாருங்க. உங்களுக்கே ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.

மத்தபடி பொதுவா மனநிலை பாதிச்சவங்கள திருநீற்றுப்பச்சிலையை முகர்ந்து பார்க்கச்சொல்லுங்க. அத்திப்பழத்தை சாப்பிட கொடுங்க. பிறகு கசகசாவை பால் விட்டு அரைச்சி கற்கண்டு சேர்த்து குடிக்க கொடுங்க.

ஆரைக்கீரை தெரியுமா உங்களுக்கு. அதை அப்பப்போ சமைச்சி சாப்பிடலாம். அதேபோல அகத்திக்கீரை சாப்பிடலாம். இதெல்லாம் உங்களுக்கு புதுசா தெரியும்.
தினசரி காலைலயும், ராத்திரி சாப்பாட்டுலயும் கறிவேப்பிலை துவையல் சேர்த்துக்கிறது ரொம்ப நல்லது.

இந்த துவையல்ல எலுமிச்சை சாறு சேர்த்து குழப்பி சாப்பிடுறது நல்லது. மத்தபடி பருத்தி விதை, ஏலக்காய், திப்பிலி, நெல்பொரி எல்லாத்தையும் பொடியாக்கி ரெண்டு கிராம் அளவு தினமும் சாப்பிட்டு வந்தா நல்ல பலன் கிடைக்கும்.

ராத்திரி தூங்கும்போது தலையணையில மருதாணிப்பூவை வச்சிட்டு தூங்குங்க. நிம்மதியா உறக்கம் வரும். அதேமாதிரி கால்ல மருதாணி பூசுங்க. அதுவும் பலன் தரும்.

இது எல்லாத்துக்கும் மேல என்ன காரணத்தால மனநிலை பாதிச்சதுன்னு தெரிஞ்சு அதுக்கு சரியான வழியை பாருங்க. சீக்கிரமா குணமாயிருவாங் க.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எச்.எம்.பி.வி. தொற்று பரவுவது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

தேவையற்ற முடிகளை இயற்கை பொருட்களைக் கொண்டு நீக்குவது எப்படி?

Show comments