Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல்வேறு நோய்களுக்கு பயனாகும் கரிசலாங்கண்ணி!

பல்வேறு நோய்களுக்கு பயனாகும் கரிசலாங்கண்ணி!
, வெள்ளி, 22 ஜூன் 2012 (16:36 IST)
கரிசலாங்கண்ணி இலை மஞ்சள் காமாலை நோய்க்கு கண்கண்ட மருந்தாக செயல்பட்டு வரும் அதே வேளையில் அது பிற உடல் உபாதைகளையும் போக்கக்கூடியது என்பது பலரும் அறியாததே.

கபம், சோபை, ஆமதோஷம் ஆகியவற்றைக் தணிக்கிறது. சருமநோய், இருதயநோய், விஷம் ஆகியவற்றைப் முறிப்பதில் கரிசலாங்கண்ணிபயன்படுகிறது.

ஐந்து அல்லது 10 கரிசாலை இலைக் கொழுந்துடன் 5 அல்லது 7 மிளகைச் சேர்த்து மோர்விட்டு அரைத்து மாத்திரை யாக்கியேனும், வெல்லம் சேர்த்து மாத்திரை செய்தேனும் காலையில் கொடுக்கலாம்

ஒரு தேக்கரண்டி அளவு அல்லது ஒரு அவுன்ஸ் கரிசாலை இலைச்சாற்றுடன் இரண்டு அல்லது நான்கு அவுன்ஸ் பாலுடன் சிறிதளவு சர்க்கரை கலந்தேனும், அல்லது 4 அவுன்ஸ் மோர் கலந்து அதனுடன் சிறிது உப்புச் சேர்த்தும் காலையில் தினந்தோறும் கொடுக்கலாம்.

கரிசாலை இலையுடன் புதிய இஞ்சி, மிளகு, உப்பு, பிற ஆகாரத்தை ருசிக்கச் செய்யும் பொருள்களுடன் சட்டினி அரைத்துத் தரலாம்.

நல்ல செரிமானம் இல்லாத நோய்களில், மோருடன் சேர்த்துச் செய்யப்பட்ட கரிசாலை மாத்திரையை தேர்ந்தெடுக்கவும்.

தலைமயிரைக் கருக்க வைக்கவும், தலை மூழ்கிய பிறகு மூளைக்கு குளிர்ச்சியாயிருக்கவும் நாடு முழுவதும் கரிசலாங்கண்ணித் தைலம் புகழுடன் பயன்பட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil