Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு

Webdunia
சனி, 25 ஜனவரி 2014 (13:01 IST)
தலைமுடியைக் காப்பாற்றிக் கொள்ள அனைவரும் பாடாய்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் அவை சந்திக்கும் பிரச்சனைகளையும், அதற்குரிய தீர்வுகளையும் பார்க்கலாம்.
FILE


முருங்கை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு வராமல் தடுக்கலாம்.

முருங்கை கீரையுடன் மிளகு சேர்த்து அரைத்து தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.

மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் கலந்து அரைத்து தலையில் புழு வெட்டு உள்ள இடத்தில் பூசினால் அந்த இடத்தில் முடி முளைக்கும்.

மருதாணி இலை, அவுரி இலை இரண்டையும் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்து வந்தால் முடி கருப்பாக மாறும்.

மருதாணி இலைகளை நன்றாக அரைத்து சிறு சிறு உருண்டைகளாக வெயிலில் காய வைத்து தினமும் ஒரு உருண்டையை தேங்காய் எண்ணெயில் கரைத்து தலையில் தடவி வந்தால் முடி வளரும்.

பொடுதலைக் கீரைச்சாற்றில் வசம்பு, வெள்ளை மிளகு இரண்டையும் சம அளவில் எடுத்து ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி ஒரு ஸ்பூன் பொடியை நல்லெண்ணெயில் குழைத்து தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து குளித்தால் பொடுகுத் தொல்லை தீரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எச்.எம்.பி.வி. தொற்று பரவுவது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

தேவையற்ற முடிகளை இயற்கை பொருட்களைக் கொண்டு நீக்குவது எப்படி?

Show comments