Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருமலை குணப்படுத்தும் தேன்!

Webdunia
திங்கள், 8 ஜூன் 2009 (14:09 IST)
இயற்கையில் நமக்கு கிடைக்கும் பல்வேறு பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்தவையாக உள்ளன. அந்த வகையில் தேன் சிறந்த மரு‌ந்தாக விளங்குகிறது.

தொடர் இருமலை நிறுத்தும் ஆற்ற‌ல் தேனுக்கு இருப்பதை சித்த மருத்துவர்கள் மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகளின் மருத்துவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர்.

பென்சில்வேனியா மருத்துவ பல்கலைக்கழக ஆய்வாளர்கள், இரவு நேரங்களில் தொடர்ந்து இருமல் இருக்கும் 105 குழந்தைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அந்த குழந்தைகளை 3 பிரிவாக பிரித்து, ஒரு பிரிவுக்கு ஒரு சிரிஞ்ச் அளவு தேனும், இரண்டாவது பிரிவுக்கு அதே அளவிலான இருமல் மருந்தும் கொடுக்கப்பட்டது. மூன்றாவது பிரிவு குழந்தைகளுக்கு ஏதும் கொடுக்கப்படவில்லை.

சிறிது நாட்களுக்குப் பிறகு, இருமல் மருந்தை தொடர்ச்சியாக உட்கொண்ட குழந்தைகளைக் காட்டிலும், தேனை உட்கொண்ட குழந்தைகளுக்கு இருமல் வெகுவாக குறைந்திருந்தது தெரியவந்தது.

நமது நாட்டில் பெரும்பாலான நாட்டு மருந்துகளும் சித்த மருந்துகளும் தேனுடன் கலந்து உண்ணும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர ். இவ்வாறு தேனின் மகத்துவத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments