Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இருமலை குணப்படுத்தும் தேன்!

இருமலை குணப்படுத்தும் தேன்!
, திங்கள், 8 ஜூன் 2009 (14:09 IST)
இயற்கையில் நமக்கு கிடைக்கும் பல்வேறு பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்தவையாக உள்ளன. அந்த வகையில் தேன் சிறந்த மரு‌ந்தாக விளங்குகிறது.

தொடர் இருமலை நிறுத்தும் ஆற்ற‌ல் தேனுக்கு இருப்பதை சித்த மருத்துவர்கள் மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகளின் மருத்துவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர்.

பென்சில்வேனியா மருத்துவ பல்கலைக்கழக ஆய்வாளர்கள், இரவு நேரங்களில் தொடர்ந்து இருமல் இருக்கும் 105 குழந்தைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அந்த குழந்தைகளை 3 பிரிவாக பிரித்து, ஒரு பிரிவுக்கு ஒரு சிரிஞ்ச் அளவு தேனும், இரண்டாவது பிரிவுக்கு அதே அளவிலான இருமல் மருந்தும் கொடுக்கப்பட்டது. மூன்றாவது பிரிவு குழந்தைகளுக்கு ஏதும் கொடுக்கப்படவில்லை.

சிறிது நாட்களுக்குப் பிறகு, இருமல் மருந்தை தொடர்ச்சியாக உட்கொண்ட குழந்தைகளைக் காட்டிலும், தேனை உட்கொண்ட குழந்தைகளுக்கு இருமல் வெகுவாக குறைந்திருந்தது தெரியவந்தது.

நமது நாட்டில் பெரும்பாலான நாட்டு மருந்துகளும் சித்த மருந்துகளும் தேனுடன் கலந்து உண்ணும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இவ்வாறு தேனின் மகத்துவத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்.

Share this Story:

Follow Webdunia tamil