Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாஜக அமித் ஷா வெறி பேச்சு; தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

பாஜக அமித் ஷா வெறி பேச்சு; தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?
, திங்கள், 7 ஏப்ரல் 2014 (13:25 IST)
நரேந்திர மோடியின் நெருக்கமானவரான அமித் ஷாவின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து தேர்தல் ஆணையம் இன்று பரிசீலனை செய்கிறது.
Amit Shah Worst Speech
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளரும், நெருக்கமானவருமான உத்தர பிரதேச மாநிலத்தின் பாஜக பொறுப்பாளருமான அமித் ஷா, அங்கு நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், முசாபர்நகர் கலவரத்தை மேற்கோள் காட்டி, "வரும் நாடாளுமன்ற தேர்தல் நமது கெளரவம் சார்ந்தது.
 
நம் சமூகத்தை (இந்து மதம்) அவமதித்தவர்களை பழிவாங்குவதற்கான தேர்தல். நமக்கு அநீதி இழைத்தவர்களை பழிக்குப்பழி வாங்க வேண்டும். நம்முடைய தாய்மார்களை, தங்கைமார்களை அவமதித்தவர்களை பழிக்குப்பழி வாங்க வேண்டும்; பாடம் புகட்ட வேண்டும்" என்று பேசினார்.
 
இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் விதத்தில் பேசிய அமித் ஷாவை உடனே கைது செய்ய வேண்டும் என அக்கட்சி தேர்தல் ஆணையத்திடமும் புகார் செய்தது.

இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறும்போது, ‘இந்தியாவின் சிந்தனையை பாஜக புரிந்து கொள்ளவில்லை என்பதையே, அமித் ஷாவின் மதவாத கருத்து வெளிப்படுத்துகிறது. மக்களை பிளவுபடுத்தி ஓட்டு பெறுவதே மதவாத பாஜகவின் ஒரே நோக்கம்’ என்றார்.
 
இதைப்போல சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளும் அமித்ஷாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.
 
ஆனால் அமித் ஷாவின் பேச்சை நியாயப்படுத்திய பாஜக, ‘அவரது பேச்சு எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்துக்கும் எதிரானது அல்ல’ என்று கூறியுள்ளது. 
 
மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டியதாக, அமித் ஷா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி உமேஷ் சின்கா தெரிவித்தார்.
 
இதற்கிடையே, அமித் ஷாவின் பேச்சுகள் அடங்கிய சி.டி. மற்றும் விவரங்களை, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், உத்தர பிரதேச மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவை மத்திய தேர்தல் ஆணையத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
 
இந்நிலையில் மத்திய தேர்தல் ஆணைய கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அமித் ஷாவின் பேச்சு குறித்தும், இது தொடர்பான உத்தர பிரதேச தேர்தல் அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ள சி.டி. மற்றும் ஆவணங்கள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil