Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தெலங்கானா பகுதியில் சந்திரபாபு நாயுடு மீது செருப்பு வீச்சு; தெலுங்குதேசம் - டி.ஆர்.எஸ். தொண்டர்கள் மோதல்

தெலங்கானா பகுதியில் சந்திரபாபு நாயுடு மீது செருப்பு வீச்சு; தெலுங்குதேசம் - டி.ஆர்.எஸ். தொண்டர்கள் மோதல்
, செவ்வாய், 29 ஏப்ரல் 2014 (12:04 IST)
தெலங்கானா பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தெலுங்குதேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திராவில் 17 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், அவற்றில் அடங்கியுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாளை (புதன்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் நேற்று அரசியல் கட்சியினர் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
 
தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு தெலங்கானா பகுதியில் இறுதிகட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார். அங்குள்ள கஜ்வேல் பகுதியில் நேற்று மதியம் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
 
அப்போது தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சித் தொண்டர்கள், திடீரென சந்திரபாபு நாயுடு மீது செருப்பு வீசினர். மேலும் அவருக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.
 
இதைத்தொடர்ந்து தெலுங்கு தேசம் மற்றும் டி.ஆர்.எஸ். கட்சி தொண்டர்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
 
இந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சி அடைந்த சந்திரபாபு நாயுடு, தேர்தல் பிரச்சாரத்தை அவசர அவசரமாக முடித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். முன்னதாக இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த அவர், டி.ஆர்.எஸ். கட்சித்தலைவர் சந்திரசேகர் ராவ் மற்றும் காவல்துறையினர் மீது கடுமையாக குற்றம்சாற்றினார். மேலும், காவல்துறையினர் பாரபட்சமின்றி நடந்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

Share this Story:

Follow Webdunia tamil