Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தில் பாலியல் தொல்லை: கண்ணீருடன் புகார் செய்த பிரபல நடிகை

Webdunia
ஞாயிறு, 10 டிசம்பர் 2017 (11:42 IST)
பிரபல பாலிவுட் நடிகையும், அமீர்கான் நடித்த 'டங்கல்' படத்தில் அவருடைய மகள் கேரக்டரில் நடித்தவருமான சைரா வாசிம், சமீபத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கண்ணீருடன் ஒரு வீடியோவை பதிவு செய்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்

சமீபத்தில் தான் டெல்லியில் இருந்து மும்பைக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றதாகவும், அப்போது தனக்கு பின்னால் அமர்திருந்த  நடுத்தர வயது சக பயணி ஒருவர் தனது காலால் தனது பின்புறத்தை சீண்டியதாகவும் அந்த வீடியோவில் கண்ணீருடன் கூறியுள்ளார்.

மேலும் இதை மற்ற சக பயணிகளோ அல்லது விமான ஊழியர்களோ தட்டி கேட்கவில்லை என்றும்,  இதுதான் நீங்கள் பெண்களுக்கு கொடுக்கும்  பாதுகாப்பா? என்றும் இது தனக்கு ஏற்பட்ட மிக மோசமான அனுபவம் என்றும் அதில் கூறியுள்ளார்

சைரா வாசிமின் இந்த பதிவுக்கு பதில் கூறியுள்ள விஸ்தாரா ஏர்லைன்ஸ் இதுகுறித்து உடனடியாக விசாரணை செய்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து ஒத்துழைப்பும் தருவதாக டுவிட்டரில் பதிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா? அறப்போர் இயக்கம் கேள்வி..!

ராஜ்யசபா தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி: பெரும்பான்மை இல்லை என அறிவிப்பு..!

ராகுல் காந்தி என்னை நெருங்கி வந்தார்: பா.ஜ.க. பெண் எம்.பி. புகாரால் பரபரப்பு.!

பாஜக எம்பிக்கள் தள்ளியதால் எனக்கு காயம்: மல்லிகார்ஜுன கார்கே புகார்

காங்கிரஸ் கட்சியின் வன்முறை நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது: கங்கனா ரனாவத்

அடுத்த கட்டுரையில்