Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

Siva
வியாழன், 19 செப்டம்பர் 2024 (18:14 IST)
திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டிய நிலையில்,  ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்பி சுப்பா ரெட்டி அதற்கு மறுப்பு தெரிவித்து, நெய்க்கு பதிலாக விலங்குகள் கொழுப்பை கலந்திருப்பதாக சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சந்திரபாபு நாயுடுவின் மகன் அமைச்சர் நாரா லோகேஷ் என்பவர், திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.
 
இதற்கு பதிலடி கொடுத்த சுப்பா ரெட்டி எம்பி, ‘திருப்பதி பிரசாதம் குறித்து, சந்திரபாபு நாயுடு தெரிவித்த கருத்துக்கள் தவறானவை என்றும், எந்த ஒரு மனிதனும் இதுபோன்ற வார்த்தைகளை பேச மாட்டார்கள் என்றும், இந்துக்களின் நம்பிக்கையையும் புனிதத்தையும் காயப்படுத்தி விட்டார் என்றும்  கூறினார்.
 
அத்துடன், அரசியல் ஆதாயத்திற்காக மோசமான செயலைச் செய்ய சந்திரபாபு நாயுடு தயங்க மாட்டார் என்பதும் இதன் மூலம் தெரிய வந்துள்ளது. திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் இல்லை என்பதை நானும் எனது குடும்பமும் சத்தியம் செய்கிறோம். அதேபோல் சந்திரபாபு நாயுடுவும் அவர் குடும்பமும் சத்தியம் செய்ய தயாரா?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8,000க்கும் அதிகமான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி.. தடுமாறும் தமிழக கல்வித்துறை..!

பா.ஜ.,வுக்கும், விஜய்க்கும் ஒரே நோக்கம் தான்: இன்னும் நம்பிக்கையுடன் இருக்கும் நயினார் நாகேந்திரன்

சகோதரனுக்கு சகோதரியுடன் திருமணம்! இரட்டை குழந்தை பிறந்தால் இப்படி ஒரு வழக்கமா? - வைரலாகும் வீடியோ!

சமூகநீதியை படுகொலை செய்த நீங்க அந்த வார்த்தைய கூட சொல்லாதீங்க? - மு.க.ஸ்டாலினை விமர்சித்த அன்புமணி!

மாமியாரை அடித்து கொடுமைப்படுத்திய மருமகள்.. மருமகளின் அம்மாவும் அடித்த சிசிடிவி காட்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments