Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃப்ரி கட்டிங் சேவிங்... போராட்டகாரர்களை அழகாக்கும் சோனு!!

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (09:32 IST)
டெல்லி சிங்கு எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு இலவசமாக முடி திருத்தம் செய்ய சோனு வர்தியா. 
 
மத்திய அரசு சமீபத்தில் அமல் செய்த புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் செய்து வருகின்றனர். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டெல்லி பஞ்சாப் ஹரியானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு, விவசாயிகள் பிரதிநிதிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் வேளாண் சட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்பதில் விவசாயிகள் தெளிவாக இருப்பதால் போராட்டம் தொடர்ந்துக்கொண்டு இருக்கிறது. 
 
இதனிடையே டெல்லி சிங்கு எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு இலவசமாக முடி திருத்தம் செய்ய சோனு வர்தியாவும் அவரது குழுவும் ஈடுப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது. ஆண்கள் மட்டுமின்றி பெண்களுக்கும் இவர் அங்கு அனைத்து உபகரணங்களையும் கொண்டு வந்து இலவசமாக முடி திருத்தம் செய்து வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments