போலீஸ்னு கூட பாக்கலையே? விரட்டி சென்ற இளைஞர் - வைரலான வீடியோ!

Webdunia
புதன், 21 ஆகஸ்ட் 2019 (12:43 IST)
கேரளாவில் ஜீப்பில் சென்று கொண்டிருந்த போலீஸை விரட்டி சென்ற இளைஞர் அவர்களை சீட் பெல்ட் போட சொல்லி அறிவுறுத்திய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கேரளா பகுதியில் ஆலப்புழாவில் ஜீப்பில் சீட் பெல்ட் போடாமல் இரண்டு போலீஸார் சென்று கொண்டிருந்திருக்கின்றனர். அதை பார்த்த இளைஞர் ஒருவர் பைக்கில் பயணித்த படியே அவர்களிடம் சீட் பெல்ட் போடுமாறு சொல்லியிருக்கிறார். ஆனால் அதை காதில் வாங்கி கொள்ளாமல் அவர்கள் போய் கொண்டிருந்தார்கள். போலீஸ் வாகனத்தை முந்தி சென்ற அந்த இளைஞர் குறுக்கே பைக்கை நிறுத்தினார். பிறகு போலீஸிடம் சென்று சீட் பெல்ட் அணியுமாறு மீண்டும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலர் இளைஞரின் செயலை பாராட்டியுள்ளனர். அதேசமயம் பலர் பைக்கில் செல்லும்போது வீடியோ எடுப்பது மட்டும் சரியான செயலா என்று கேள்வியும் எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'மோந்தா' புயல் கரையை கடக்கும்போது 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.. வானிலை எச்சரிக்கை..

தேர்தல் ஆணையத்தின் ’SIR’ தொடங்க சில நாட்கள்.. திடீரென 47 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய மம்தா பானர்ஜி..!

காட்டுப்பாதையில் அமெரிக்காவுக்கு நுழைய முயன்ற 50 இந்தியர்கள்.. கைவிலங்கிட்டு நாடு கடத்தல்..!

வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்..!

சாலையின் நடுவே சாக்கு மூட்டையில் கட்டுக்கட்டாக பணம்.. மதுரையில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments