Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கத்தியை பிடிக்கக்கூட தெரியவில்லை ; கேலி செய்ததால் 24 முறை குத்தி கொலை செய்தேன்

கத்தியை பிடிக்கக்கூட தெரியவில்லை ; கேலி செய்ததால் 24 முறை குத்தி கொலை செய்தேன்

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2016 (17:50 IST)
டெல்லியில் இளம் ஆசிரியரை, பட்டப்பகலில் 24 முறை கத்தியால் குத்தி கொலை செய்த கொலைகாரன், கத்தியை கூட ஒழுங்காக பிடிக்க தெரியவில்லை என்று கேலி பேசியதால் கொலை செய்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.


 

 
தில்லி ரயில் நிலையம் அருகே, பட்டப்பகலில் கருணா என்ற இளம்பெண் ஆசிரியையை ஒரு வாலிபர் திடீரென தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் 24 முறை குத்திக் கொன்ற வீடியோ நேற்று வெளியானது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இக்கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், அப்பெண்ணை கொலை செய்த சுரேந்தர் என்ற வாலிபரை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளது. 
 
சுரேந்தருக்கும், கருணாவுக்கும் 2012ம் ஆண்டு முதல் பழக்கம் இருந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன் அவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், பழைய உறவை புதுப்பிக்க சுரேந்தர் முயன்றுள்ளர். ஆனால், கருணா, மோகித் என்பவரை காதலித்து வருவது தெரியவந்துள்ளது. 
 
இதனால் ஆத்திரம் அடைந்த சுரேந்தர், நேற்று இதுபற்றி கருணாவிடம் வாக்கு வாதம் செய்துள்ளார். அதன்பின், தான் மறைத்து வைத்திருந்த கத்திரிக்கோலால் கருணாவை குத்தியுள்ளார். அவரின் முதல் குத்து கருணாவின் தோள்பட்டையில் விழுந்துள்ளது.


 

 
அதற்கு, கத்தியை கூட உனக்கு ஒழுங்காக பிடிக்கத் தெரியவில்லை என்று கருணா கேலி செய்ததாகவும், அதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற சுரேந்தர், அவரை 24 முறை கொடூரமாக குத்தி கொலை செய்ததாகவும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
 
போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு டெல்லி அரசுக்கு  மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments