Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.6000 பணத்திற்காக இளைஞர் கொலை : சென்னையை சேர்ந்த மூவர் கைது

காளகஸ்தியில் இளைஞர் கொலை

ரூ.6000 பணத்திற்காக இளைஞர் கொலை : சென்னையை சேர்ந்த மூவர் கைது
, செவ்வாய், 5 ஜனவரி 2016 (18:10 IST)
வெறும் ரூ.6000 பணத்திற்காக ஒரு இளைஞர் காளகஸ்தியில் கொலை செய்யப்பட்ட விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஹைதராபத்தை சேர்ந்தவர் சீனிவாஸ். இவரும், இவரின் நண்பரும் கடந்த மாதம் ஒரு வங்கி கட்டிட வேலைக்காக காளகஸ்தி வந்தனர். மேலும் அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர். இந்நிலையில், அந்த அறையில் சீனிவாஸ் கை நரம்பு அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
 
இதுபற்றி காளகஸ்தி போலிசார் விசாரணை செய்த போது, கொலை நடந்த அறையில் ஒரு ஆதார் அட்டை கிடந்துள்ளது. அதைவைத்து துப்பு துளக்கிய போலிசார், சென்னைய போரூரை சேர்ந்த விஜயன், சாந்தி மற்றும் சுரேஷ் ஆகிய மூவரையும் கைது செய்துள்ளார்கள். அவர்களிடம் போலிசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
அவர்கள் போலிசாரிடம் கூறும்போது “நாங்கள் மூன்று பேரும் ஒன்றாக சில ஊர்களுக்கு செல்வோம். தேசிய நெடுஞ்சாலையில், சாந்தியை தனியாக நிற்க வைத்து லாரியில் செல்லும் டிரைவர்களுடம் லிப்ட் கேட்பது போல், வண்டியை நிறுத்துவோம். அதன்பின் அவரை விபச்சாரத்திற்கு அழைப்பது போல் காட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று அடித்து உதைத்து அவர்களிடம் உள்ள பணத்தை பறித்து செல்வோம். லாரியில் விலை உயர்ந்த பொருள் இருந்தால், டிரைவரை கொலை செய்து விட்டு, அந்த பொருட்களுடன் லாரியை கடத்தி சென்றுவிடுவோம். 
 
இதுபோன்று செயல்களை நாங்கள் பல இடங்களில் செய்துள்ளோம். அதுபோல்  காளகஸ்தி சென்று ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினோம். சீனிவாசன் எங்கள் அறைக்கு பக்கத்து அறையில் இருந்தார். நைசாக அவரிடம் பேச்சு கொடுத்து பழகினோம். அவரும் எங்களுடன் நன்றாக பழகினார்.
 
சம்பவத்தன்று, அவரிடம் பணம் கேட்டோம். அவர் பணம் வைத்திருந்தும் கொடுக்க மறுத்தார். இதனால் கோபமடைந்த நாங்கள், அவரை வாயை பொத்தி, கை கால்களை கட்டிப் போட்டோம். அதன் பின், கத்தியால் அவரின் கை நரம்புகளை அறுத்துவிட்டு, அவர் வைத்திருந்த ரூ.6000 பணம் மற்றும் சொல்போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டோம்.

நிறைய ரத்தம் வெளியானதால் அவர் இறந்து விட்டார் என்ற தகவல் தெரிந்ததும் தலைமறைவாகி விட்டோம். இருந்தாலும், விஜயனின் ஆதார் அட்டையை வைத்து போலிசார் எங்களை பிடித்துவிட்டனர்” என்று வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil