Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண் நீதிபதியுடன் செல்பி எடுத்த வாலிபருக்கு சிறை

பெண் நீதிபதியுடன் செல்பி எடுத்த வாலிபருக்கு சிறை
, வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (14:23 IST)
ஒரு பெண் மாஜிஸ்திரேட் உடன் செல்பி எடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விவகாரம் உத்திரபிரதேசம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
இளைஞர்களிடையே பரவி வரும் செல்பி மோகம், ஒருவரை சிறைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளியிருக்கிறது. 
 
உத்திரபிரதேசம் மாநிலம் புலந்தசகர் மாவட்ட நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டாக இருப்பவர் சந்திரலேகா. இவர் பிப்ரவரி 1ஆம் தேதி, ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் உரையாடினார். அந்த நிகழ்ச்சிக்கு வந்த ஒரு வாலிபர் தான் வைத்திருந்த செல்போனில், சந்திரலேகாவுடன் செல்பி எடுப்பதிலேயே குறியாக இருந்துள்ளார்.
 
அங்கிருந்தவர்கள் அவரை பலமுறை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. அங்கிருந்த காவல் அதிகாரிகள் செல்போனிலிருத்து செல்பி எடுத்த படங்களை அழிக்க சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அந்த வாலிபரோ அவற்றை அழிக்க முடியாது என்று அவர்களிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். இதனையடுத்து அந்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  
 
இதுபற்றி கருத்து தெரிவித்த சந்திரலேகா “இளைஞர்கள் பொறுப்புடன் நடந்து  கொள்ள வேண்டும். நான் அரசு அதிகாரி மட்டுமல்ல. நானும் ஒரு பெண்தான். பெண்ணுக்குரிய கண்ணியத்தை அனைவரும் மதிக்க வேண்டும். பெண்களுக்கான சுதந்திரத்தில் இளைஞர்கள் இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும்.
 
அவர்களுக்கென்று நிறைய பொறுப்புகள் இருக்கிறது. அதை விட்டு விட்டு, இளைஞர்கள் இப்படி நடந்து கொள்வது கவலையை தருகிறது” என்று அவர்  கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil