Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வி ஏன்? உபி முதல்வர் யோகியின் வித்தியாசமான விளக்கம்

Webdunia
புதன், 14 மார்ச் 2018 (19:23 IST)
கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற உபி மாநிலத்தின் கோரக்பூர் மற்றும் புல்பூர் தொகுதியில் பாஜக தோல்வி அடைந்தது. இந்த இரண்டு தொகுதிகளையும் அகிலேஷ்-மாயாவதி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் 5 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் முதல்வர் ஆனவுடன் ராஜினாமா செய்த தொகுதி கோரக்பூர் என்பது குறிப்பிடத்தக்கது

கோரக்பூர் தொகுதியிலும் சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீன்குமார் 21000 வாக்குகள் வித்தியாசத்திலும், புல்பூர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் சுமார் 59,000 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர். இந்த இரு தொகுதிகளின் தோல்வி, பாஜகவின் வீழ்ச்சிக்கான ஆரம்பம்  என்று எதிர்க்கட்சியினர்களால் விமர்சனம் செய்யப்படுகிறது

இந்த நிலையில் இந்த தோல்வி குறித்து முதல்வர் யோகி கூறியதாவது: இந்த இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். சமாஜ்வாதி கூட்டணியை குறைவாக மதிப்பிட்டதே தோல்விக்கு காரணம். இந்த தோல்வி குறித்து கட்சியினர் கூடி ஆராய்வு செய்வோம்' என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் உபியின் இரண்டு மக்களவை தொகுதி, பீகாரின் ஒரு மக்களவை தொகுதி என மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் டெபாசிட் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படலாம்.. உக்ரைன் தலைநகரில் தூதரகத்தை மூடிய அமெரிக்கா..!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கு பல எஜமானர்கள்: அன்புமணி கடும் விமர்சனம்..!

டீச்சர் கொலை.. வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு.. முதல்வர் ஸ்டாலின் வெட்கப்படனும்: அண்ணாமலை

நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன்: சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

இன்றிரவு 15 மாவட்டங்களில் கனமழை.. சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட்.. வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments