Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடியூரப்பா அரசு தானாகவே கவிழ்ந்துவிடும்: சித்தராமையா

Webdunia
புதன், 28 ஆகஸ்ட் 2019 (09:00 IST)
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் அரசு தானாகவே கவிழ்ந்துவிடும் என்றும், அந்த அரசை கவிழ்க்க நாங்கள் எந்த முயற்சியையும் மேற்கொள்ள மாட்டோம் என்றும், அந்த அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது என்றும் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் பிரமுகருமான சித்தராமையா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
 
 
கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பாவை நியமனம் செய்ய பாஜக மேலிடத்திற்கு விருப்பம் இல்லை என்றும், ஆனால் எடியூரப்பா பாஜக மேலிடத்தை கெஞ்சி இந்த பதவியை பெற்று உள்ளதாகவும், இதனை அடுத்து அவரது பதவியை டம்மியாக்க 3 துணை முதலமைச்சர்களை மேலிடம் நியமனம் செய்து இருப்பதாகவும் சித்தராமையா கூறினார் 
 
 
முதல்வர் எடியூரப்பாவை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் 3 துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், துணை முதல்வர்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின்படி அவர்களுக்கு எந்த சிறப்பு அதிகாரமும் கிடையாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் 
 
 
மேலும் பாரதிய ஜனதாவில் அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியாளர்கள் விரைவில் வெடிக்க வாய்ப்பு உள்ளதாகவும், எடியூரப்பா அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருவதாகவும், அவர் எத்தனை நாட்கள் முதலமைச்சராக இருப்பார் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்றும் சித்தராமையா கூறியுள்ளார் 
 
 
கர்நாடகத்தில் ஏற்கனவே ஒரு சில மாதங்கள் மட்டுமே  குமாரசாமி ஆட்சி செய்த நிலையில் தற்போது எடியூரப்பாவின் ஆட்சியும் விரைவில் கலைந்துவிடும் என்று சித்தராமையா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments