உலகின் மிகப்பெரிய அலுவலகம் இனி பென்டகன் இல்லை.. குஜராத்தில் தான்.. ஆச்சரிய தகவல்..!

Webdunia
புதன், 19 ஜூலை 2023 (07:46 IST)
உலகின் மிகப்பெரிய அலுவலகம் என்ற பெருமையை இதுவரை அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அலுவலகமான பென்டகன் இருந்த நிலையில் தற்போது  இந்தியாவில் பென்டகனை விட பெரிய அலுவலக கட்டிடம் ஒன்று குஜராத் மாநிலத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் திறக்கப்பட உள்ளது.  
 
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் என்ற பகுதியில் 35 ஏக்கரில் 9 செவ்வக வடிவ அமைப்புகளில் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் 15 மாடிகளை கொண்டுள்ளது. 
 
வைரத் தொழிலின் தலைநகரமாக விளங்கும் சூரத்தில் வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல், விற்பனை செய்தல் உள்ளிட்டவற்றை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் இந்த கட்டிடம் கட்டிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
4200 அலுவலங்கள் செயல்படும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த அலுவலகத்தில் 65,000 பேர் பணியாற்ற முடியும் என்றும் பிரதமர் மோடி இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த கட்டிடத்தை திறக்க திறந்து வைக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments