Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல்காந்தி நாட்டை விட்டு வெளியேறிவிடுவார்: சிவசேனா நாளேடு அறிவிப்பு

Webdunia
திங்கள், 3 ஜூன் 2019 (07:45 IST)
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விரைவில் நாட்டை விட்டு வெளியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னா என்ற பத்திரிகையில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.
 
நம்மூரில் நமது அம்மா, முரசொலியில் அதிரடி கட்டுரைகள் வெளிவருவது போன்று மகாராஷ்டிராவில் வெளிவரும் பத்திரிகை சிவசேனாவின் சாம்னா. இதில் சிவசேனா கட்சியின் எம்பி சஞ்சய் ராவத் என்பவர் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.
 
அந்த கட்டுரையில், ' பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிக்கு எப்ப்டி மாற்று இல்லையோ, அதேபோல் ராகுல்காந்தியின் தோல்விக்கும் மாற்று இல்லை. நாட்டில் தற்போது ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் நிலவுகிறது. ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகியும் இன்னும் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தேர்தலில் பெற்ற தோல்வியால் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் ராகுல்காந்தி, விரைவில் நாட்டை விட்டு வெளியேறினாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அவருக்காக வெளிநாட்டுக்கு செல்லும் விமானங்கள் தயார் நிலையில் உள்ளது
 
மேலும் கர்நாடகா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விரைவில் பாஜகவில் இணைவார்கள். இங்குள்ள காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி பூசலால் விரைவில் ஆட்சி கவிழும். இவ்வாறு அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments