Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய நோட்டு பெற வந்த பெண் வங்கி வாசலில் மரணம் - யார் பொறுப்பு?

புதிய நோட்டு பெற வந்த பெண் வங்கி வாசலில் மரணம் - யார் பொறுப்பு?

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2016 (15:47 IST)
தன்னிடம் இருந்த பணத்தை, புதிய நோட்டாக மாற்ற வந்த பெண் ஒருவர், அது முடியாமல் போனதால் வங்கி வாசலிலேயே மயங்கி விழுந்து மரணம் அடைந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
உத்தரப்பிரதேச மநிலம், குஷிநகர் மாவட்டம், கோரக்பூரைச் சேர்ந்தவர் தித்ரஜி(40). இவர் ஒரு சலவைத் தொழிலாளி. படிப்பறிவில்லாத இவர், தன்னிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஒப்படைத்து, புதிய நோட்டு பெறுவதற்காக வங்கிக்கு சென்றுள்ளார். அது முடியாது என்று தெரிந்தவுடன், தன்னுடைய கணக்கில் டெபாசிட் செய்ய முயன்றுள்ளா. ஆனால், நேற்று வங்கிக்குகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால், 2 நாட்கள் கழித்து அவரை வரச் சொல்லியிருக்கிறார்கள்.
 
ஆனால், படிப்பறவில்லாததால் தன்னிடம் இருந்த பணம் செல்லாமல் போய் விட்டது என்று நினைத்த அவர், பணத்தை மாற்ற முடியாமலே போய்விடுமோ என்ற விரக்தியில், மன உளைச்சல் அடைந்து வங்கியை விட்டு வெளியே வந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக, வங்கி வாசலிலேயே மயங்கி விழுந்து மரணமடைந்தார்.
 
அவரது உடலுக்கு அருகே ஆயிரம் ரூபாய் நோட்டு 2ம், அவரின் பாஸ்புக்கும் கிடந்துள்ளது. அதன்பின், அங்கிருந்தவர்கள் அவரின் உறவினருக்கு தகவல் அளித்தனர். அவரது உடலைக் கண்டு அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.
 
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இவரின் மரணத்திற்கு பொறுப்பேற்கப்போவது யார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா? அறப்போர் இயக்கம் கேள்வி..!

ராஜ்யசபா தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி: பெரும்பான்மை இல்லை என அறிவிப்பு..!

ராகுல் காந்தி என்னை நெருங்கி வந்தார்: பா.ஜ.க. பெண் எம்.பி. புகாரால் பரபரப்பு.!

பாஜக எம்பிக்கள் தள்ளியதால் எனக்கு காயம்: மல்லிகார்ஜுன கார்கே புகார்

காங்கிரஸ் கட்சியின் வன்முறை நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது: கங்கனா ரனாவத்

அடுத்த கட்டுரையில்
Show comments