Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலுக்கு தூது போன பெண்ணை நிர்வாண ஊர்வலம் அழைத்து சென்ற கும்பல்...

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (18:41 IST)
தனது சகோதரரின் காதலுக்கு தூதுபோன ஒரு பெண்ணை நிர்வாணமாக்கி, ஊர்வலமாக அழைத்து சென்ற கொடூரம் மராட்டிய மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அரங்கேறியுள்ளது.


 

 
மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள சக்லம்பா கிராமத்தில் வசிக்கும் ஒரு பெண், தனது சகோதரருக்கும், பக்கத்து கிராமத்த்தில் உள்ள ஒரு சிறுமிக்கும் இடையே காதல் தூதுவராக இருந்துள்ளார். இந்த விவகாரத்தை தெரிந்து கொண்ட அந்த சிறுமியின் வீட்டார், காதலுக்கு உதவியாக இருந்த பெண்ணையும், அவரது கணவரையும் ஊர் மக்கள் முன்பு மன்னிப்பு கேட்க வைத்தனர். 
 
அதன் பின்பும் ஆத்திரம் தீராத அப்பெண்ணின் குடும்பத்தினர், கடந்த 4ம் தேதி, அப்பெண்ணின் கணவர் வெளியே சென்றிருந்த நிலையில், அப்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அப்பெண்ணை அடித்து உதைத்தனர். மேலும், அவரை நிர்வாணமாக்கி வெளியே அழைத்து வந்து கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்து சென்றனர். 
 
இந்த சம்பவம் அந்த கிராமத்தில் வசிக்கும் பெண்களிடையே பீதியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த சம்பவத்திற்கு காரணமான 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாம்பழ லாரி கவிழ்ந்து விபத்து.. மூட்டை மூட்டையாய் அள்ளி சென்ற பொதுமக்கள்..!

லிவ் இன் காதலியை விபச்சாரத்திற்கு தள்ள முயன்ற காதலன்.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

காசு கொடுத்தால் மனைவியுடன் உல்லாசம்.. தட்டி கேட்க வந்த போலீஸும்..? - பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

17 நீதிபதிகளை டிஸ்மிஸ் செய்த டிரம்ப்.. அறிவுகெட்ட செயல் என கடும் விமர்சனம்..!

75 வயது மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்த 51 வயது மருமகன்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்