புதிய காரை எலுமிச்சை மீது ஏற்றியபோது விபத்து.. முதல் மாடியில் இருந்து கார் விழுந்ததால் பரபரப்பு..!

Mahendran
புதன், 10 செப்டம்பர் 2025 (15:29 IST)
கிழக்கு டெல்லியின் நிர்மான் விகாரில், ஒரு பெண் தனது புதிய மஹிந்திரா தார் ஜீப்புக்கு பூஜைகள் செய்து, டயரின் கீழ் எலுமிச்சையை வைத்துவிட்டு காரை இயக்கியபோது விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
காசியாபாத்தை சேர்ந்த 29 வயதான மாணி பவார் என்பவர், தனது கணவருடன் ₹27 லட்சம் மதிப்புள்ள தார் ஜீப்பை வாங்க மஹிந்திரா ஷோரூமிற்கு சென்றுள்ளார். புதிய வாகனத்திற்கு பூஜை செய்வதற்காக, சக்கரங்களின் கீழ் எலுமிச்சையை வைத்து, காரை இயக்கியுள்ளார். எதிர்பாராதவிதமாக, கார் முதல் மாடியில் இருந்த கண்ணாடி சுவரை உடைத்துக்கொண்டு கீழே விழுந்தது.
 
விபத்தின்போது, காரில் இருந்த மாணி பவார், அவரது கணவர் மற்றும் விற்பனையாளர் விகாஸ் ஆகிய மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வாகனத்தில் இருந்த காற்று பைகள் விரிந்ததால் அவர்களுக்கு பெரிய காயம் ஏற்படவில்லை. உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, முதலுதவி சிகிச்சைக்கு பிறகு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து நடந்தபோது கீழே யாரும் இல்லாததால், பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
 
இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வழியாக செல்லும் வந்தே பாரத் உள்பட 4 புதிய ரயில்கள்: பிரதமர் தொடங்கி வைத்தார்...

2வது நாளாக மீண்டும் உயரும் தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

மாலியில் 5 இந்தியர்கள் கடத்தல்: அல்-கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் காரணமா?

மாணவர்கள் கேலி.. கண்டிக்காத ஆசிரியர்கள்.. 9 வயது மாணவி 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..!

உடல் பருமனாக இருந்தால், நீரிழிவு நோய் இருந்தால் விசா கிடையாது: டிரம்ப் அதிரடி

அடுத்த கட்டுரையில்
Show comments