Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளத்தொடர்பு விவகாரம் ; பெண்ணிடம் செருப்படி வாங்கிய போலீஸ் அதிகாரி

Webdunia
செவ்வாய், 23 ஜனவரி 2018 (14:02 IST)
பெண் போலீஸ் அதிகாரியிடம் கள்ளத்தொடர்பு வைத்திருந்த போலீஸ் அதிகாரியை அப்பெண் போலீஸ் அதிகாரியின் தாய் செருப்பால் அடித்த விவகாரம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
தெலுங்கானா மாநிலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை ஏ.எஸ்.பியாக பணிபுரிந்து வருபவர் சுனிதா ரெட்டி. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் தனியே வசித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையேயான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
 
இந்நிலையில், ஹைதரபாத் கல்வகுர்த்தி பகுதியில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் மல்லிகார்ஜூனாவுடன் சுனிதா ரெட்டிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சுனிதாவின் கணவர் சுரேந்தர் ரெட்டி பலமுறை கண்டித்தும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை.
 
இந்நிலையில், அவர்கள் இருவரும் ஒன்றாக வீட்டில் இருந்த போது, உறவினர்களுடன் அங்கே வந்த  சுரேந்தர் அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்தார். அப்போது ஏற்பட்ட களோபரத்தில் சுனிதாவின் தாயார், காவல் ஆய்வாளர் மல்லிகார்ஜுனாவை செருப்பால் தாக்கியுள்ளார். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.
 
இதைத்தொடர்ந்து மல்லிகார்ஜுனா தற்போது தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சுனிதா மீதும் துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
 
மல்லிகார்ஜுனாவை சுனிதாவின் ரெட்டியின் தாயார் செருப்பால் தாக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments