Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நரேந்திர மோடி 64ஆவது பிறந்த நாள் - தலைவர்கள் வாழ்த்து

Webdunia
புதன், 17 செப்டம்பர் 2014 (12:01 IST)
செப்டம்பர் 17ஆம் நாள், பிரதமர் நரேந்திர மோடியின் 64ஆவது பிறந்த நாள். இந்த நாளையொட்டி, தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். 
 
தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், உங்களது மகிழ்ச்சிகரமான பிறந்த நாளில், உங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் நீண்ட நாட்கள் நல்ல உடல் நலத்துடன் வாழ்ந்து, நமது நாட்டுக்குச் சேவையாற்ற இறைவனிடம் வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
 
தமிழக ஆளுநர் ரோசையா, உங்களது பிறந்த நாளில், எனது இதயம் கனிந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் நாட்டின் பெருமையாகவும், நம்பிக்கை ஒளிக்கீற்றாகவும் வழிகாட்டுபவராகவும் திகழ்கிறீர்கள். உங்களது மக்கள் நல மேம்பாட்டுத் திட்டங்கள், நாட்டு சேவைக்கான அர்ப்பணிப்பு உணர்வு, உங்களை உலகத் தலைவர்களில் ஒருவராக உயர்த்தியுள்ளது. நீங்கள் நீண்ட காலம், நல்ல உடல் நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சேவையாற்ற வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமருக்கு தேமுதிக கட்சியின் சார்பில் என் இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா வல்லரசாக மாற தங்களின் நிர்வாகத் திறமை, அரசை வழி நடத்தும் ஆற்றல் போன்றவை முக்கிய காரணங்களாக அமையும் என்பதால், இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளையும், பூரண நலத்தையும் அருள வேண்டும் என வேண்டி கொள்கிறேன்“ என்று கூறியுள்ளார்.
 
முன்னதாக, பிறந்த நாளைக் கொண்டாடுவதற்குப் பதிலாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரின் நிவாரணப் பணிகளுக்கு உதவுமாறு தம் நண்பர்களையும் நல விரும்பிகளையும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments