Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோடு ரோலரை ஏற்றி நொறுக்கப்பட்ட ரூ.36 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள்.. ஆறாக ஓடிய மது..!

Siva
சனி, 10 ஆகஸ்ட் 2024 (07:38 IST)
ஆந்திர மாநிலத்தில் ரூபாய் 36 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை ரோடு ரோலரை வைத்து நொறுக்கப்பட்ட நிலையில் மது ஆறாக ஓடியதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது ஆந்திர மாநிலத்தில் சட்டவிரோதமாக வெளி மாநிலங்களிலிருந்து மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டது.

பல்வேறு வகை வகையில் 27,568 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இதன் மதிப்பு ரூ.36 லட்சம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கலால் சட்டத்தின்படி பறிமுதல் செட் செய்யப்பட்ட மது பாட்டில்களை ரோடு ரோலரை விட்டு காவல்துறையினர் நொறுக்கினர். அப்போது பாட்டில்கள் உடைந்து சிதறி மது ஆறாக ஓடிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து திருப்பதி எஸ்பி சுப்பராய்டு அவர்கள் கூறிய போது ’மது பாட்டில்களை கடத்தி வருவது சட்டப்படி குற்றம் என்றும் குறிப்பாக இளைஞர்கள் இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வாழ்க்கையை அழித்துக் கொள்ள வேண்டாம் என்றும் சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறியுள்ளார்.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments