Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிய யுவ்ராஜின் தந்தை – சர்ச்சையால் கைதாவாரா?

Webdunia
சனி, 5 டிசம்பர் 2020 (15:12 IST)
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளான் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் 10 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டுமென பஞ்சாப், ஹரியாணா மாநில விவாசாயிகள் லட்சக்கணக்கானோர் டெல்லியில் இன்று 10வது நாளாகப் போராடி வருகின்றனர்.  இப்போரட்டத்திற்கு பல்வேறு எதிர்கட்சிகள் ஆதரவு அளித்துவரும் நிலையில் வரும் 8 ஆம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து விவசாயிகளுக்கும் அரசு தரப்புக்கும் நடந்த பேச்சுவார்த்தையிலும் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டது போல தெரியவில்லை. இந்நிலையில் இந்த போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் யுவ்ராஜ் சிங்கின் தந்தையுமான யோகராஜ் சிங் போராட்டக் களத்துக்கு சென்று பேசினார்.

அப்போது சிலர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் விதமாக பேசியதை பற்றி செய்தியாளர்களிடம் யோகராஜ் சிங் ‘நீங்கள் என்ன விதைக்கிறீர்களோ அதைதான் அறுப்பீர்கள். இந்த மாதிரி உணர்வு பூர்வமான நேரத்தில் அதுபோல பேசுவது தவறில்லை’ எனக் கூறியுள்ளார். மேலும் அவர் இந்து பெண்களைப் பற்றியும் இழிவுபடுத்தி பேசியதாக சொல்லி பாஜக ஆதரவாளர்கள் சமூகவலைதளங்களில் அவரைக் கைது செய்ய சொல்லி ஹேஷ்டேக்குகளை உருவாக்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பாப்கார்னுக்கு GST.. கூட்டத்தில் முடிவு

மீண்டும் பணி நீக்கம் செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. காரணம் என்ன?

பாகிஸ்தான் என்ன ஏவுகணையை உருவாக்கியுள்ளது? அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தல் என கூறுவது ஏன்?

காடற்ற அனாதை சிங்கம்.. காட்டுக்கே ராஜாவான கதை! Mufasa: The Lion King விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments