Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா.? உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கோரிய ED..!

Senthil Velan
திங்கள், 6 மே 2024 (11:32 IST)
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை மே 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

ஜாமீன் வழங்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
 
இந்நிலையில் ஜாமீன் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 328 நாட்களாக செந்தில் பாலாஜி சிறையில் உள்ளதாகவும், அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் வாதிட்டார். 

இந்த ஜாமீன் மனு மீது பதிலளிக்க ஐந்து நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை மே 15 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் மகன் வீட்டில் பாலியல் தொழில்; சென்னையில் சிக்கிய கும்பல்!

கடலில் மூழ்கிய மீனவர்களின் படகு.. மீட்க சென்ற படகும் மூழ்கியதால் பரபரப்பு..!

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த 34 வயது பெண்.. சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்..!

ராமதாஸை அடுத்து எடப்பாடி பழனிச்சாமிக்கும் வேலையில்லை.. அமைச்சர் சேகர்பாபு..!

டெல்லி பிவிஆர் தியேட்டர் அருகில் திடீரென வெடித்த மர்ம பொருள்.. தீவிரவாதிகள் சதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments