Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சர்தார்ஜி ஜோக்குகளுக்கு தடைவருமா? உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

சர்தார்ஜி ஜோக்குகளுக்கு தடைவருமா? உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
, சனி, 31 அக்டோபர் 2015 (18:20 IST)
சர்தார்ஜி ஜோக்குகள் மிகவும் பிரபலமான ஒன்று, இந்த ஜோக்குகளை கேட்காதவர்கள் மிகவும் குறைவு எனலாம், சர்தார்களின் மனதை புன்படுத்தும் இந்த ஜோக்குகளுக்கு தடைகேட்டு உச்ச நீதிமன்றத்தில் ஒரு சீக்கிய வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளார்.


 
 
சர்தார்ஜி ஜோக்குகளுக்கு தடை விதிக்கவேண்டும் என சீக்கிய வழக்கறிஞர் ஹர்வீந்தர் சவுத்ரி உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தார், அவரின் மனுவை உச்ச நீதிமன்றனம் இன்று ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ளது. அவரது மனுவில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மூலம் இணையதளத்தில் உலவும் சர்தார்ஜி ஜோக்குகளுக்கும் அந்த இணையதளங்களுக்கும் தடை விதித்து அதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
 
ஹர்வீந்தர் சவுத்ரியின் இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஒரு மாதத்திற்கு பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil