வட்டி வசூல் செய்ய நிதி நிறுவன ஊழியருடன் ஓடிப்போன மனைவி.. பரிதாபத்தில் கணவன்..!

Mahendran
வியாழன், 13 பிப்ரவரி 2025 (16:18 IST)
வட்டி வசூல் செய்ய வந்த நிதி நிறுவன ஊழியர் உடன் மனைவி ஓடி சென்ற சம்பவம், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கணவர் ஒருவருக்கு பெரும் சோதனையை ஏற்படுத்தியுள்ளது.
 
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த இந்திரகுமாரி என்பவர், நகுல் ஷர்மா என்பவரை 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணத்திற்குப் பிறகு கணவர் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி, தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
 
ஒரு கட்டத்தில், கணவனால் உடலளவிலும் மனளவிலும் துன்பத்தை அனுபவித்து வந்த இந்திரகுமாரிக்கு, திடீரென அவரது வீட்டிற்கு வட்டி வசூலிக்க வந்த நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பவன் குமார் யாதவ் என்பவர், வட்டி வசூலிப்பதற்காக அவ்வப்போது வந்த நிலையில், இந்திரகுமாரியின் வீட்டிற்கும் வந்து நீண்ட நேரம் பேசிவிட்டு சென்றார். இதனால், இருவருக்கும் இடையே நட்பு வளர்ந்து, பின்னர் அது காதலாக மாறியது.
 
இந்த நிலையில், கணவனின் கொடுமைகளை இனி மேலும் தாங்க முடியாது என்று முடிவு செய்த இந்திரகுமாரி, தனது மனக்குமுறலை பவன் குமாரிடம் வெளிப்படுத்தினார். பின்னர், இருவரும் தனியாக சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்தனர்.
 
இதனை அடுத்து, கடந்த நான்காம் தேதி இந்திரகுமாரி திடீரென பவன் குமாருடன் தலைமறைவாகினார். மேலும், இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
 
இந்த விவகாரத்தில், இந்திரகுமாரியின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து, காவல்துறை விசாரணை மேற்கொண்ட போது, தனது சொந்த விருப்பத்தினால் தான் பவன் குமாரை திருமணம் செய்ததாகவும்,  நகுலுடன் இனிமேல் வாழப் போவதில்லை என்றும் கூறினார். இதனால் காவல்துறையினர் குழப்பம் அடைந்துள்ளனர். 
 
இதுகுறித்து, காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

துபாயில் படித்த 18 வயது இந்திய மாணவர் திடீர் மரணம்.. இந்த சின்ன வயதில் மாரடைப்பா?

வழக்கு பதியாமல் கட்டப் பஞ்சாயத்து செய்வ்தா? காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்..!

மாமனார் நாராயணமூர்த்தி சொன்னபடி வாரம் 70 மணி நேரம் வேலை செய்யும் ரிஷி சுனக்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

இந்திய பெண்ணை வேலையில் இருந்து தூக்கிய மெட்டா.. சில நிமிடங்களில் கிடைத்த அடுத்த வேலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments