Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக கோடீஸ்வரர்கள் அதிகம் இருக்கும் நாடு? டாப் 10ல் இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

Prasanth Karthick
ஞாயிறு, 8 டிசம்பர் 2024 (10:08 IST)

உலக அளவில் அதிகமான கோடீஸ்வரர்கள் உள்ள நாடுகள் குறித்த பட்டியலில் இந்தியா டாப் 10 இடத்திற்கு வந்துள்ளது.

 

 

உலகம் முழுவதும் பல நாடுகளை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் சொந்த நாடு மற்றும் மற்ற நாடுகளில் பெரிய அளவில் வணிகம் செய்து வருகின்றன. அவ்வாறான பன்னாட்டு நிறுவனங்களின் நிறுவனர்கள் பெரும் கோடீஸ்வரர்களாக உலக அளவிலான தொழில் போட்டியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோடீஸ்வரர்களில் எந்த நாட்டில் எவ்வளவு கோடீஸ்வரர்கள் உள்ளனர் என்பது குறித்து சர்வதேச நிறுவனம் ஒன்று ஆய்வு செய்துள்ளது.

 

2024ம் ஆண்டின் கணக்கின்படி உலக அளவில் அதிக கோடீஸ்வரர்கள் உள்ள நாடாக அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. 835 பேர் அமெரிக்காவின் மிகப்பெரும் தனவந்தர்களாக உள்ளனர். அதை தொடர்ந்து சீனா இரண்டாவது இடத்தில் 427 பெரும் கோடீஸ்வரர்களை கொண்டுள்ளது.

 

அதற்கு பிறகு இந்தியா மூன்றாவது இடத்தில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடாக உள்ளது. 185 கோடீஸ்வரர்கள், பெருநிறுவன முதலாளிகள் இந்தியாவில் உள்ளதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

 

இந்தியா ஏழை நாடு என்ற சொல் பல நாடுகளிலும் இருந்து வரும் நிலையில், அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளில் டாப் 10 இடங்களில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது நகைமுரணாக அமைந்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராட்டினம் அறுந்து சிறுவன் பலி: ரூ.2,600 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு..!

உலக கோடீஸ்வரர்கள் அதிகம் இருக்கும் நாடு? டாப் 10ல் இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

டிசம்பர் 12ல் தமிழகத்தில் ரெட் அலெர்ட்! மிக கனமழை வாய்ப்பு! - இந்திய வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

நாட்டை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்! தப்பி ஓடிய அதிபர்? - சிரியாவில் அதிர்ச்சி!

திருவண்ணாமலை மகாதீப பாதையில் மண் சரிவு: ஆய்வுக்கு பின்னர் தான் பக்தர்களுக்கு அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments