Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதுநிலை நீட் தேர்வு எப்போது.? தேதியை அறிவித்த தேசியத் தேர்வுகள் முகமை.!!

Mbbs pg neet
Senthil Velan
வெள்ளி, 5 ஜூலை 2024 (15:56 IST)
ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. 
 
மருத்துவ படிப்புகளுக்காக நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வில் பெரும் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 
 
இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் நுழைவுத்தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றது கண்டறியப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு, தேர்வு முடிவுகள் குளறுபடிகள் சார்ந்து ஏராளமான மாணவர்களால் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். 
 
தேர்வில் முறைகேடு நடைபெற்றதை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒப்புக்கொண்டார். நெட் தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரைத்தொடர்ந்து அந்த தேர்வும் ரத்து செய்யப்பட்டது.
 
இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஜூன் 23ஆம் தேதி நடைபெற இருந்த நீட் முதுநிலைத் தேர்வு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் தேர்வு எழுத தயாராக இருந்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

ALSO READ: உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைப்பதா.? அரசாணைக்கு அண்ணாமலை எதிர்ப்பு..!!
 
இந்நிலையில்  முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் முகமை இன்று அறிவித்துள்ளது. முதுநிலை நீட் தேர்வு காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments