Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மிஸ்டர் மோடி பேடிஎம் நிறுவனத்துடன் என்ன ஒப்பந்தம்? - சந்தேகிக்கும் கெஜ்ரிவால்

மிஸ்டர் மோடி பேடிஎம் நிறுவனத்துடன் என்ன ஒப்பந்தம்? - சந்தேகிக்கும் கெஜ்ரிவால்
, வியாழன், 10 நவம்பர் 2016 (21:14 IST)
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பு வெளியான அடுத்த நாள் மோடியின் புகைப்படம் நிறுவனத்தின் விளம்பரத்தில் வருகிறது. இது என்ன ஒப்பந்தம் திரு.மோடி? என புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.


 

இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில், ”மிகவும் வெட்கக்கேடானது. மக்கள் தங்கள் பிரதமர் ஒரு தனியார் நிறுவனத்திற்கு விளம்பரம் செய்வதை விரும்புவார்களா? ஒருவேளை நாளை இந்த நிறுவனம் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் எதுவாவது புரிந்தால், யார் அதை தட்டி கேட்பது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ”500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் அதிகம் பயனடைந்த நிறுவனங்களில் பேடிஎம் நிறுவனமும் ஒன்று. இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாள் பிரதமர் மோடியின் புகைப்படம் அந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் வருகிறது. இது என்ன ஒப்பந்தம் திரு.மோடி?” என்றும் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பட்டாசு வெடித்து மாட்டிக் கொண்ட அர்ஜுன் சம்பத்: வழக்கு பதிந்த போலீஸ்