Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன கொடுமை இது... லட்சத்தில் எகிறும் பாலியல் குற்றவாளிகள் எண்ணிக்கை…

Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2018 (17:32 IST)
மத்திய அரசு முதன் முறையாக பாலியல் குற்றவாளிகளுக்கான தேசிய ஆவணத்தை உள்ளடக்கிய இணையதளத்தை(என்.டி.எஸ்.ஓ) வெளியிட்டு உள்ளது. இதில் மொத்தம் 4.5. லட்சம் பேர் தண்டனை பெற்றவர்களாக உள்ளதாகவும், இவர்களில் 3.5 லட்சம் பேரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதில் குறிப்பாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள், கூட்டு பாலியலில் ஈடுபட்டவர்கள்,மற்றும் ஈவ்டீசிங் தண்டனை பெற்ற குற்றவாளிகளின் பெயர் விவரங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

இந்த தேசிய ஆவணத்தை மத்திய உள்துறை அமைச்சகம் பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து தேசிய குற்றப்பதிவு ஆணையமும் பாராமரிக்கும்.

இந்தியாவில் நடக்கும் பாலியல் வழக்குகளை கண்காணித்து முறையான விசாரணை செய்வதற்கு இந்த ஆவணங்கள் உதவும் என்று நம்பப்படுகிறது.கடந்த ஏப்ரலில் 2018 ல் அமைச்சரவை ஒப்புதல் அளித்த இந்த ஆவணம் உலக அளவில் ஒன்பதாவது நாடாக இந்திய பாலியல் குற்றவாளிகள் குறித்த தேசிய ஆவணத்தை (என்டிஎஸ்ஓ) அமைப்பதற்கும் பராமரிக்க உள்ளது.

இந்த ஆவணத்தில் பெயர்,முகவரி,புகைப்படம்,கைரேகை, போன்ற விவரங்கள் உள்ளன. இந்த ஆவணமானது எந்த ஒரு தனி நபரின் உரிமையையும் சமரசம் செய்யாதபடி அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே சைபர் கிரைம் விசாரணையை வலுப்படுத்தவும் போலீஸ் அதிகாரிகள் பொது வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் ஆகியோரின் திறன்களை மேம்படுத்த பயிற்சி திட்டங்கள் நடத்தவும் சைபர் பார்னிங் -கம்- பயிற்சி ஆய்வகங்களை நிறுவுவதற்கும்  மாநில/யூனியம் பிரதேசங்களுக்கு 9கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்