Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'சிறுநீர் பாசனம்' ன்னு நான் சொன்னது கரெக்ட் தான் பா - மல்லுக்கட்டும் எச்.ராஜா

Webdunia
புதன், 11 ஜூலை 2018 (06:56 IST)
பாஜக வை சேர்ந்த எச்.ராஜா சிறுநீர்ப் பாசனம் என்று தான் பேசியது சரி என்பதை டிவிட்டர் மூலம் விளக்கியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா  சென்னைக்கு வருகை தந்து பாஜக தொண்டர்களிடம் பேசினார். அமித்ஷா இந்தியில் பேசியை எச்.ராஜா தமிழில் மொழிபெயர்த்தார். 
 
மைக்ரோ இர்ரிகேஷன் என்ற ஆங்கில சொல்லை அமித்ஷா பயன்படுத்திய நிலையில் அதை உண்மையில் சொட்டுநீர்ப்பாசனம் என்று எச்.ராஜா மொழி பெயர்த்திருக்க வேண்டும். ஆனால் எச்.ராஜா, 'சிறுநீர் பாசனம்' என்று மொழி பெயர்த்தார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பலரது கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார் எச்.ராஜா.
 
இந்நிலையில் இதுகுறித்து எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் நான் பேசியது தவறு தான் என்று போடுவார் எனப் பார்த்தால், வழக்கம்போல் செய்த தவறை ஒப்புக்கொள்ளாமல் மல்லுக் கட்டினார்.
 
அதில் வித்தவுட் கமெண்ட் என்று போட்டு மைக்ரோ என்பதற்கான அர்த்தம் சிறிய, நுண்ணிய, நுண் என்று பொருள் போட்டிருந்தார்.
நாம் தேடி பார்த்த வரையில் மைக்ரோ என்பதற்கு அர்த்தம் நுண், சிறிய என்றுதான் வருகிறது. எந்த இடத்திலும் சிறுநீர் என்று இல்லை. ராஜா எந்த டிக்ஸ்னரியை பார்த்து இப்படி பதிவிட்டார் என்பது தெரியவில்லை என பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments