Webdunia - Bharat's app for daily news and videos

Install App

90 ரயில் டிரைவர்களுக்கு கொரோனா உறுதி! – ரயில்களை ரத்து செய்த மேற்கு வங்கம்!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (09:42 IST)
மேற்கு வங்கத்தில் ரயில்வே டிரைவர்கள் உட்பட 90 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் லோக்கல் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் மிக வேகமாக அதிகரிக்க தொடக்கியுள்ள நிலையில், தினசரி பாதிப்புகள் 2 லட்சத்தை தாண்டியுள்ளன. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்துதலை அதிகரித்தல், பகுதி நேர ஊரடங்கை அறிவித்தல் என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மேற்கு வங்க ரயில் பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் டிரைவர்கள், கார்டுகள் உள்ளிட்ட 90 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து லோக்கல் ரயில் சேவைகளில் 56 ரயில்களின் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவசியமான வழித்தடங்களில் குறிப்பிட்ட சில நேர வரிசையில் பயணிகள் ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments