Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத்தை போல மேற்குவங்க மக்கள் செயல்பட வேண்டும்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

Webdunia
திங்கள், 10 ஜூலை 2017 (05:40 IST)
குஜராத்தை போல மேற்குவங்கத்தில் முஸ்லீம்களை இனப்படுகொலை செய்யுங்கள் என பாஜக எம்.எல்.ஏ ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இதற்கு நாடெங்கிலும் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றது



 
 
பாஜக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே பாஜக எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் சர்ச்சைக்கருத்துக்கள் கூறி வருவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்குவங்கத்தில் கலவரம் நடந்து வரும் நிலையில் தெலங்கானா மாநிலத்தின் கோஷல்மால் என்ற தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ., ராஜா சிங் கூறுகையில், ‘‘மேற்கு வங்க மாநிலத்தில் இந்துக்கள் பாதுகாப்பாக வாழ முடியவில்லை. மத மோதலில் ஈடுபடுவோருக்கு குஜராத்தில் நடத்தியது போல் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கவில்லை என்றால், மேற்கு வங்கம் விரைவில் வங்கதேசமாக மாறிவிடும். கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அனைவரும் துரோகிகள். அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். ’’ என்றார்.
 
ஏற்கனவே ஃபேஸ்புக் பதிவு ஒன்றால் மேற்குவங்கத்தில் நடைபெற்று வரும் கலவரத்தை அடக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதாக தெலுங்கானா எம்.எல்.ஏ பேச்சு உள்ளதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வரை ’ஸ்டாலின் மாமா’ என்று அழைப்பதா? விஜய்க்கு அமைச்சர் கே.என்.நேரு கண்டனம்..!

உங்க விஜய் உங்க விஜய்.. தனி ஆள் இல்ல கடல் நான்.. விஜய் பகிர்ந்த செல்பி வீடியோ..!

இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க அதிரடி கைது.. என்ன காரணம்?

ஜெகன் மோகன் ரெட்டிக்கு சொந்தமான டிவி மீது திருப்பதி தேவஸ்தானம் புகார்.. அவதூறு செய்தியா?

இன்று 10 மாவட்டங்களை வெளுக்கப் போகும் மழை! - வானிலை ஆய்வு மையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments