Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகவிலைப்படியை உயர்த்த மாநில அரசிடம் நிதியில்லை: முதல்வர் அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2023 (10:12 IST)
மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட அறிவிப்பு வெளியான நிலையில் அகவிலைப்படியை உயர்த்த மாநில அரசிடம் நிதி இல்லை என மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 
 
மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகராக மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும் என மேற்குவங்க அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இது குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் மமதா பானர்ஜி தான் உயர்த்திய அகவிலைப்படியில் திருப்தி இல்லை எனில் தனது தலையை வெட்டி எடுத்துக் கொள்ளும்படி அவர் தெரிவித்துள்ளார். தற்போது மூன்று சதவீதம் அகவிலைப்படை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளதை அடுத்து மேற்குவங்க அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய மம்தா பானர்ஜி, ‘மத்திய அரசுக்கு நிகராக அகவிலைப்படியை உயர்த்த சாத்தியமில்லை என்றும் அதற்கு மாநில அரசிடம் நிதியும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

டிகிரி படிப்பை முன்கூட்டியே முடிக்கலாம்.. 3 வருடம் தேவையில்லை! - UGC அளித்த ஒப்புதல்!

காங்கிரஸ் உறவை துண்டிக்க வேண்டும்: உத்தவ் தாக்கரேவுக்கு சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் நெருக்கடி?

அடுத்த கட்டுரையில்
Show comments